ரஷிய டென்னிஸ் வீரர் டேனில் மெத்வதேவ் அல்மாட்டி ஓபன் பட்டத்தை வென்றதன் மூலம், ஏடிபி தரவரிசையில் மீண்டும் முதல் 5 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். புதிய பட்டியலில் அவர் ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தில் உள்ளார்.
கஜகஸ்தானின் அல்மாட்டி நகரில் நடந்த இத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில், ஜார்ஜியாவின் நிகோலஸ் பசிலாஷ்விலியை அவர் சந்தித்தார். முதல் செட்டை டைபிரேக்கரில் 6-7 (6-8) என இழந்த மெத்வதேவ், அடுத்த இரு செட்களை 6-1, 6-3 என எளிதாகக் கைப்பற்றிச் சாம்பியன் ஆனார்.
இறுதிப்போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.
















