இரண்டாவது நாளாகத் தங்கம் விலை சரிந்ததால் நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதல் கிடைத்துள்ளது. சென்னையில் இன்று ஒரு சவரன் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.1,05,880 ஆக உள்ளது; நேற்றைய விலையைவிட இது ரூ.1,240 குறைவு.
கிராம் விலை ரூ.13,235. நேற்றைய விலையான ரூ.13,390-உடன் ஒப்பிட்டால் ரூ.155 வீழ்ச்சி. நேற்றும் சவரனுக்கு ரூ.800 குறைந்து, சவரன் ரூ.1,07,120 என்ற அளவில் இருந்தது.
வெள்ளியும் இதே போக்கில் உள்ளது. ஒரு கிராம் ரூ.225 என ரூ.5 குறைந்துள்ளது. கிலோ வெள்ளி ரூ.5,000 இறங்கி, ரூ.2.25 லட்சத்தில் வர்த்தகமாகிறது.




















