அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றால், அவர்கள் கொண்டுவரும் அனைத்து மசோதாக்களையும் தமது 'வீட்டோ' அதிகாரத்தால் நிராகரிப்பேன் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். சமீபத்திய பேட்டியில் அவர் இதைத் தெரிவித்தார்.
தொடர்ந்து நிராகரித்தால் அவர்கள் சமரசப் பேச்சுவார்த்தைக்கு தம்மிடம் வருவார்கள் என்றும் அவர் கூறினார். தமது குடியரசு கட்சியே வெற்றி பெறும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 4.30 மணிக்கு (இந்திய நேரம்) தொடங்குகிறது; முடிவுகள் நாளை வெளியாகும். பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும் செனட்டின் 35 இடங்களுக்கும் தேர்தல் நடக்கிறது.
ஈரான் மீதான போர், வெளியுறவுக் கொள்கை சிக்கல்கள் காரணமாக மக்களுக்கு குடியரசு கட்சி, டிரம்ப் நிர்வாகத்தின் மீதான நம்பிக்கை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது; அக்கட்சி பின்னடைவைச் சந்திக்கக்கூடும் என்ற கணிப்புகளுக்கு இடையே இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.












