பா.ரஞ்சித் இயக்கும் 'வேட்டுவம்' படம் அடுத்த ஆண்டு ஜனவரி பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகும் என்பதை உறுதிப்படுத்தும் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் படம் வெளியாக உள்ளது.
ஆர்யா 'தர்மராஜன்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். புதிய போஸ்டரில் அவர் கையில் ஆயுதங்களுடன், பின்னால் கூட்டமும் புகையும் சூழ ஆக்ரோஷமாகத் தோன்றுகிறார்.
உலகம் அழிந்த பிறகான புதிய உலகில் பல குழுக்களுக்கு இடையே நடக்கும் அதிகாரப் போராட்டமே படத்தின் கதை. அடிமுறை, மல்லகம்பம் போன்ற பழங்காலத் தற்காப்புக் கலைகள் சண்டைக் காட்சிகளில் முக்கிய இடம் பெறுகின்றன.
அட்டகத்தி தினேஷ், சோபிதா துலிபாலா, கலையரசன், சபீர் கல்லரக்கல், குரு சோமசுந்தரம் ஆகியோரும் நடிக்கின்றனர். நீலம் புரொடக்ஷன்ஸ், லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் இணைந்து தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு ரூபேஷ் ஷாஜி; படத்தொகுப்பு செல்வா ஆர்.கே.












