ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் ஹாரர் த்ரில்லர் திரைப்படமான '13'-ன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
மெட்ராஸ் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தை கே.விவேக் இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக பவ்யாதி ரிகா நடிக்க, கவுதம் மேனனுடன் கதிரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.
உண்மைச் சம்பவங்களுடன் கற்பனையும் அமானுஷ்யமும் கலந்து திகில் படமாக இது உருவாகியுள்ளது; மனிதர்கள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடிந்து, வெளியீட்டுக்கு முந்தைய பணிகள் வேகமாக நடக்கின்றன. படத்தை டிசம்பரில் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திகில் படம் 'இம்மார்டல்'. அதில் கயாடு லோகர் கதாநாயகியாக நடித்திருந்தார்.












