பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அமிர்தசரஸ் வடக்கு தொகுதி எம்எல்ஏ குன்வர் விஜய் பிரதாப் சிங், தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இவர், கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் குல்தார் சிங் சந்தவானுக்கு அனுப்பியதாகவும், அதன் நகலை தமது முகநூல் பக்கத்தில் பகிர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2027 சட்டமன்றத் தேர்தலுக்கான 40 வேட்பாளர்களின் முதல் பட்டியலை ஆம் ஆத்மி கடந்த இரு நாட்களுக்கு முன் வெளியிட்டது. அதில் சனௌர் எம்எல்ஏ ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா, சமனா எம்எல்ஏ சேதன் சிங் ஜௌரமஜ்ரா ஆகியோர் பெயர் இடம்பெறவில்லை. அவர்களது தொகுதிகளுக்கு புதிய பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து இருவரும் நேற்று கட்சியிலிருந்து விலகினர்.
இந்த மூவரும் இன்று டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியில் இணைய உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்து அவர்கள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












