ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், இந்திய வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி ஒரே நாளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
காம்பவுண்ட் தனிநபர் மகளிர் பிரிவில் அவர் தங்கம் வென்றார். இதற்கு முன்பு, காம்பவுண்ட் கலப்பு அணி இறுதிப் போட்டியில் ஷீத்தல் தேவியும் டோமன் குமாரும் இணைந்து இந்தோனேசியாவை 151-148 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கம் கைப்பற்றினர். இந்தத் தொடரில் வில்வித்தையில் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் தங்கம் அது. தனிநபர் பிரிவு வெற்றியுடன், இத்தொடரில் ஷீத்தல் பெறும் இரண்டாவது தங்கமாக இது அமைந்தது.
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் கடந்த 18-ம் தேதி தொடங்கின; இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இரு கைகளும் இல்லாமல் பிறந்த ஷீத்தல் தேவி, கால்கள் மற்றும் தோள்பட்டையைப் பயன்படுத்தி வில்வித்தையில் சாதித்து வருகிறார். அவரது இந்த வெற்றிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.



















