ஈரானுடனான எல்லைச் சாவடிகள் மூடப்பட்டதால் பாகிஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டருக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 12 கிலோ சிலிண்டரின் விலை ரூ.4,500-இலிருந்து ரூ.7,000 ஆக உயர்ந்துள்ளது.
பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள காப்ட்–ரிம்தான், டஃப்தான் ஆகிய எல்லைச் சாவடிகள் கடந்த 17-ஆம் தேதி மூடப்பட்டன. பாதுகாப்புப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் கடத்தலைத் தடுக்கவும் தற்காலிகமாக மூடப்பட்டதாக பலுசிஸ்தான் அரசு கூறுகிறது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறே காரணம் என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஈரானிலிருந்து நாள்தோறும் சுமார் 7,000 மெட்ரிக் டன் எல்பிஜி இறக்குமதி செய்கிறது. இதில் 4,000 டன்னுக்கு மேல் காப்ட்–ரிம்தான் சாவடி வழியாகவே வருகிறது; இந்த இறக்குமதி தற்போது முழுமையாக நின்றுவிட்டது. குவாதர் வர்த்தக மற்றும் தொழில் துறைச் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஷம்சுல் ஹக் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.
விநியோகத் தடை தொடர்ந்தால் விலை மேலும் உயரக்கூடும் என்று கூறப்படுகிறது.












