வதோதராவில் நடைபெற்ற முதல் மகளிர் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வேயை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல் தனது மூன்றாவது ஒருநாள் சதத்தைப் பதிவு செய்தார்.
முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 198 ரன்கள் இலக்கை இந்திய அணி 27.1 ஓவர்களிலேயே எட்டியது. ராவலுடன் ஷபாலி வெர்மா 64 ரன்கள் சேர்த்து வெற்றியை எளிதாக்கினார்.
ஜிம்பாப்வே மகளிர் அணி இந்தியாவில் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. டி20 தொடரின் மூன்று ஆட்டங்களிலும் வென்று இந்தியா தொடரை முழுமையாகக் கைப்பற்றியிருந்தது. ஒருநாள் தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.












