தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி அண்மையில் பொறுப்பேற்றார்.
புதிய கவர்னராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பிறகு நாளை முதல்முறையாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவரை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். நாளை காலை 11 மணிக்கு கவர்னர் மாளிகையில் இச்சந்திப்பு நடைபெறவுள்ளது.
தமிழகத்தின் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் அரசியல் சார்ந்த முக்கிய விவகாரங்கள் குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
























