தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தில் பொதுமக்களை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இனி மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைக்கு நேரில் வர அவசியமில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடை மேலாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில்,
தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலமாக விரல் கைரேகை பெற்று அதன் மூலமாக பொது விநியோக திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும்.
அதேபோல் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் நேரடியாக வந்து பொருட்களை வாங்க முடியாத பட்சத்தில் மாற்றாக வேறொருவர் வந்து வாங்குவதற்கு அத்தாட்சி கடிதம் வழங்க வேண்டும். அந்த கடிதத்தை காண்பித்து அவர்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்று கொள்ளலாம்.
ஒருசில நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களை அலைக்கழிப்பதாக புகார்கள் வருவதால், இனிமேல் பொதுமக்கள் புகார் அளித்தால், அந்த நியாய விலை கடை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை. விடுத்துள்ளது.
























