வேலூர் மாவட்டம் அலமேலுமங்காபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று (செவ்வாய்) காலி மது பாட்டில்களை ஏற்றிச் சென்ற லாரி மீது தனியார் ஆம்னி பேருந்து மோதியது. இதில் லாரி நடுரோட்டில் தலைகீழாகக் கவிழ்ந்தது.
லாரியிலிருந்த ஆயிரக்கணக்கான பாட்டில்கள் உடைந்து சாலை முழுவதும் கண்ணாடித் துகள்கள் சிதறின. தகவல் அறிந்து சத்துவாச்சாரி போலீசாரும் சுங்கச்சாவடி ஊழியர்களும் வந்து லாரியை மீட்டு கண்ணாடிகளை அகற்றினர்.
இதனால் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 கி.மீ. தூரம் வாகனங்கள் வரிசையாக நின்றன. சுமார் 3 மணி நேரத்துக்குப் பிறகு சாலை சுத்தம் செய்யப்பட்டு போக்குவரத்து சீரானது. போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.












