அமெரிக்க நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்தப் போவது யார் என்பதை முடிவு செய்யும் இடைக்காலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பிக்கிறது.
அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சிக்கும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. பிரதிநிதிகள் சபையின் 435 இடங்கள் அனைத்துக்கும், செனட் சபையில் காலியாகும் 35 இடங்களுக்கும் தேர்தல் நடக்கிறது. முடிவுகள் நாளை (நவம்பர் 4) அதிகாலை முதல் வெளியாகத் தொடங்கும்.
ஜனநாயகக் கட்சி ஏதேனும் ஒரு அவையைக் கைப்பற்றினாலும் டிரம்பின் எஞ்சிய இரண்டு ஆண்டு பதவிக்காலத்தில் அவரது மசோதாக்களைக் கட்டுப்படுத்தவோ முடக்கவோ முடியும் எனக் கூறப்படுகிறது. சுமார் 26 லட்சம் இந்திய வம்சாவளியினர் வாக்களிக்க உள்ளதாகவும், அவர்களின் வாக்குகள் முக்கியமாகப் பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












