83 வயதான ஹாலிவுட் இயக்குநர் மைக்கேல் மான் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் எதிர்பாராத விதமாகத் தம்மைத்தாமே சுட்டுக்கொண்டார். கடந்த சனிக்கிழமை மாலை நான்கு மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், துப்பாக்கியைப் பாதுகாப்பாக வைக்க முயன்றபோது அது வெடித்ததாக அவரது பிரதிநிதிகள் உறுதிப்படுத்தினர்.
காலில் லேசான காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
'ஹீட்', 'தீஃப்', 'மேன்ஹன்டர்', 'கொல்லாட்ரல்', 'தி இன்சைடர்' போன்ற படங்களால் அறியப்படும் இவர் கடைசியாக 2023-ல் 'ஃபெராரி' படத்தை எடுத்தார். ராபர்ட் டி நீரோவும் அல் பேச்சினோவும் இணைந்த 1995-ம் ஆண்டின் 'ஹீட்' படத்துக்கு இரண்டாம் பாகம் எடுக்கும் முயற்சியிலும் இருக்கிறார். அதில் லியோனார்டோ டிகாப்ரியோ, கிறிஸ்டியன் பேல், ஆடம் டிரைவர் ஆகியோர் நடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












