தங்கத்தின் விலை கடந்த சில நாட்களில் கடுமையாகச் சரிந்துள்ளது. கடந்த 5 மாதங்களில் இல்லாத இந்தச் சரிவு இன்னும் சில நாட்கள் தொடரலாம் என்று வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
உலக அளவில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்து வருவது இதன் பின்னணி. பிரெண்ட் வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 109.87 டாலராக உயர்ந்து, 5 மாதங்களில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் பணவீக்கம் அதிகரிக்கும் சூழலில், அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
வட்டி விகிதம் உயர்ந்தால் அமெரிக்கப் பத்திரங்களிலும் டாலரிலும் அதிக வருவாய் கிடைக்கும் என்பதால், முதலீட்டாளர்கள் தங்கத்திலிருந்து பணத்தை எடுத்து அவற்றில் முதலீடு செய்து வருகின்றனர். இதுவே தங்கம் விலை சரியக் காரணம் என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ரஷ்யா மீதான கட்டுப்பாடுகள், ஈரான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை முடங்கியது, அமெரிக்காவின் டீசல் ஏற்றுமதிக் கட்டுப்பாடு, சவுதி எண்ணெய் வயல்கள் மீதான ஹவுதி தாக்குதல் ஆகியவை காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.


















