ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் ஃபர்ஹானா. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜித்தன் ரமேஷ் செல்வராகவன் அனுமன் ஐஸ்வர்யா தாத்தா அப்படின்னு பலர் நடிச்சிருக்காங்க
குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி காரணமாக வேலைக்கு செல்ல விரும்புகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவரது அப்பா வேலைக்கு செல்ல வேண்டாம் என்கிறார். அதையும் தாண்டி தனது கணவர் ஜித்தன் ரமேஷ் ஆதரவுடன் தோழி மூலமாக ஒரு கால் சென்டரில் வேலைக்கு சேர்கிறார். பேங்க் கிரெடிட் கார்ட் வழங்கும் வேலையில் வாடிக்கையாளர்களிம் பேசும் வேலை அது! பிறகு இன்சன்டிவ் வேண்டும் என நினைத்து நட்புலகம் எனும் பெயரில், இயங்கும் முகம் தெரியாத நபருடன் பேசும் வேலையில் செய்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அங்கு முகம் தெரியாத நபர் ஐஸ்வர்யாவை தொடர்பு கொண்டு பேச நாளடைவில் நேரில் பார்க்க விரும்புகிறார். அப்போது தனது தோழி இது போன்ற முகம் தெரியாத நபருடன் பேசி, இறந்த விஷயம் தெரிய வர அதிர்ச்சியாகிறார். அந்த முகம் தெரியாத நபரை பார்க்க தவிர்த்து விடுகிறார். ஆனால் அவர் தொடர்ந்து தொல்லை கொடுக்க, அதிலிருந்து ஐஸ்வர்யா மீண்டாரா அவரை நேரில் சந்தித்தாரா என்பது படத்தின் மீதி கதை!
படம் ட்ரைலர் வந்த போது பல எதிர்ப்புகளை எதிர் கொண்ட திரைப்படம். ஆனால் அதையெல்லாம் தாண்டி சமூகத்தில் இருக்கும் பிரச்சனைகளை தனது கதையின் மூலம் சிறப்பாக சொல்ல வந்திருக்கிறார் நெல்சன் வெங்கடேசன். முதல் பாதியில் சற்று தடுமாறி இருக்கிறார். தெரியாத நபருடன் போனில் பேசும் வேலையை மறந்து பேசினால் என்ன ஆகும் என விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் இயக்குனர் ஜஸ்டின் பிரபாகர். பின்னணி இசை சில காட்சிகளில் பரபரப்பை ஏற்படுத்துகிறது பாடல்கள் சுமார் ரகம். ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தை தாங்கி பிடிப்பது படம் பார்க்கும் நமக்கு அவர் நடிப்பில் தெரிகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜித்தன் ரமேஷ் நல்ல கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. அதை சிறப்பாக பயன்படுத்தி நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒளிப்பதிவாளர் கோகுல் வினோய் சிறப்பு! மெட்ரோ ட்ரெயின் ட்ராக், கால் சென்ட்ரல் நடக்கும் காட்சிகளை காட்சிப்படுத்தியது சிறப்பு!! எடிட்டர் வீஜே சார்பு ஜோசப் கட் ஓகே! இஸ்லாமியர்களை காட்டும் விதம் சினிமாவில் வில்லனாகவே பல ஆண்டு காலம் இருந்திருக்கும் சூழலில் இஸ்லாமிய பெண்ணின் குடும்ப நிலையை உணர்த்தி சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வரும் கதையை உருவாக்கி இருப்பது சிறப்பு! வாழ்த்துக்கள்


























