• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
4thetamil.in
  • முகப்பு
  • செய்திகள்
    • All
    • Latest News
    • இந்தியா
    • உலகம்
    • சுற்றுச்சூழல்
    • தமிழ்நாடு
    • தொழில்நுட்பம்
    அரிட்டாப்பட்டிக்கு வெண்ணெய் ! பரந்தூருக்கு சுண்ணாம்பா?

    அரிட்டாப்பட்டிக்கு வெண்ணெய் ! பரந்தூருக்கு சுண்ணாம்பா?

    அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் இவரா? அப்படினா ஜெகத்ரட்சகன் ஒரம்கட்டப்படுகிறாரா?

    அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் இவரா? அப்படினா ஜெகத்ரட்சகன் ஒரம்கட்டப்படுகிறாரா?

    பாடலாசிரியர்கள் இங்கு முழுமையான சுதந்திர உணர்வுடன் எழுத முடிவதில்லை – ட்ரெண்டிங் கவிஞர் அ.ப. இராசா பளீர் பேட்டி

    பாடலாசிரியர்கள் இங்கு முழுமையான சுதந்திர உணர்வுடன் எழுத முடிவதில்லை – ட்ரெண்டிங் கவிஞர் அ.ப. இராசா பளீர் பேட்டி

    அதிமுக – பாஜக கூட்டணி முறிவு : உண்மை பின்னணி என்ன? – மூத்த பத்திரிகையாளர் திரு. பெலிக்ஸ் ஜெரால்டு நேர்காணல்

    அதிமுக – பாஜக கூட்டணி முறிவு : உண்மை பின்னணி என்ன? – மூத்த பத்திரிகையாளர் திரு. பெலிக்ஸ் ஜெரால்டு நேர்காணல்

    எரிமலைகளால் சூழப்பட்டுள்ள புதிய கோள் கண்டுபிடிப்பு!

    எரிமலைகளால் சூழப்பட்டுள்ள புதிய கோள் கண்டுபிடிப்பு!

    ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கும் மெட்டாவின் புதிய செயலி!

    ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கும் மெட்டாவின் புதிய செயலி!

    Trending Tags

    • Trump Inauguration
    • United Stated
    • White House
    • Market Stories
    • Election Results
  • சினிமா

    ஹீரோவாக ஜெயித்தாரா அர்ஜுன் தாஸ்? வசந்த பாலனின் அநீதி எப்படி இருக்கு? – திரை விமர்சனம்

    ஹீரோவாக ஜெயித்தாரா அர்ஜுன் தாஸ்? வசந்த பாலனின் அநீதி எப்படி இருக்கு? – திரை விமர்சனம்

    மாவீரன் திரைவிமர்சனம்

    மாவீரன் திரைவிமர்சனம்

    பாபா பிளாக் ஷீப் திரைவிமர்சனம்

    பாபா பிளாக் ஷீப் திரைவிமர்சனம்

    பிச்சைக்காரன் 2 மக்களை கவர்ந்ததா? – திரை விமர்சனம்.

    பிச்சைக்காரன் 2 மக்களை கவர்ந்ததா? – திரை விமர்சனம்.

    ‘விஜய்68’ படத்தை இயக்கும் வெங்கட் பிரபு; வெளியாகியிருக்கும் ’வாவ்’ அப்டேட்!

    ‘விஜய்68’ படத்தை இயக்கும் வெங்கட் பிரபு; வெளியாகியிருக்கும் ’வாவ்’ அப்டேட்!

    Trending Tags

    • Nintendo Switch
    • CES 2017
    • Playstation 4 Pro
    • Mark Zuckerberg
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • லைப்ஸ்டைல்
    • All
    • உணவு
    • ஃபிட்னஸ்
    • பயணம்
    திரும்பப் பெறப்படும் Cadbury சாக்லெட் தயாரிப்புகள்; வைரஸ் பரவல் காரணமா?

    திரும்பப் பெறப்படும் Cadbury சாக்லெட் தயாரிப்புகள்; வைரஸ் பரவல் காரணமா?

    உணவு உண்ணும்போது செல்போன் பயன்படுத்த தடைவிதித்த ஜப்பானிய உணவகம்.

    உணவு உண்ணும்போது செல்போன் பயன்படுத்த தடைவிதித்த ஜப்பானிய உணவகம்.

    பலூன் மீனை உட்கொண்ட மனைவி உயிரிழப்பு; கோமா நிலையில் கணவர்!

    பலூன் மீனை உட்கொண்ட மனைவி உயிரிழப்பு; கோமா நிலையில் கணவர்!

    1 வருடத்தில் ரூ.6 லட்சத்திற்கு ஸ்விக்கியில் இட்லி ஆர்டர் செய்த நபர்!

    1 வருடத்தில் ரூ.6 லட்சத்திற்கு ஸ்விக்கியில் இட்லி ஆர்டர் செய்த நபர்!

    காதல் செய்வீர்!

    காதல் செய்வீர்!

    தீபாவளி அன்று இறைச்சிக்கடைகளை திறக்க அனுமதி. ஜெயின் வழிபாட்டு தலங்கள் அருகிலுள்ள இறைச்சி கடைகள் மட்டும் மூடியிருக்கும் – தமிழ்நாடு அரசு

    Trending Tags

    • Golden Globes
    • Game of Thrones
    • MotoGP 2017
    • eSports
    • Fashion Week
No Result
View All Result

Home தமிழ்நாடு

அனைத்து வங்கிகளும் கல்விக்கடன், சுய உதவிக்குழு கடன் வழங்கி உதவ வேண்டும் ~ மு.க.ஸ்டாலின்

Editor Desk by Editor Desk
October 25, 2021
in தமிழ்நாடு
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இன்று நடைபெற்ற வங்கியாளர் குழு சிறப்புக்கூட்டத்தில் அனைத்து வங்கிகளும் ஏழை மாணவர்களுக்கு கல்விக்கடன் மற்றும் சுயஉதவிக் குழுக்களுக்கான கடன் வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் வங்கியாளர்கள், அரசு அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசுக்கும் மக்களுக்கும் வங்கி நிறுவனங்கள் செய்துவரும் சேவைகளுக்கு முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தனது உரையைத் தொடங்கினார்.

”இந்த சந்திப்பு மாநிலத்தின் வளர்ச்சியில் அரசுக்கும் வங்கிகளுக்கும் இடையிலான கூட்டுறவு உறவின் தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களைச் செயல்படுத்துவதில் வங்கிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதிலும் குறிப்பாக கொரோனாவில் இருந்து வென்று வரும் இக்காலக்கட்டத்தில் உங்களது பங்களிப்பு மிக மிக முக்கியமானதாகும். இப்போது மாநிலத்தின் பொருளாதாரத்தில் முக்கியமான துறைகளுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்கவும்; பொருளாதாரம் புத்துயிர் பெறவும்; தொற்றுநோய்களின் போது பல குடும்பங்கள் அனுபவித்த வருமான இழப்பை மாற்றவும் வேண்டிய ஒரு முக்கியமான காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். எனவே அரசும் வங்கிகளும் இந்த நேரத்தில் இணைந்து செயல்படுவது மிக முக்கியமானது என்பதால் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

“20 லட்சம் கோடி ரூபாய் ஜிடிபியுடன் நாட்டிலேயே இரண்டாவது பெரிய மாநில பொருளாதாரமாக தமிழ்நாடு உள்ளது. தமிழக அரசு பல்வேறு முக்கிய நலத்திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்திக்கொண்டு இருக்கிறது. இது மாநிலத்தின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், மக்களின் வளர்ச்சிக்கு குறிப்பாக சமூகத்தின் ஏழை மற்றும் நலிந்த பிரிவினரின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளது. மக்களும் வளர வேண்டும் – தொழில் நிறுவனங்களும் வளர வேண்டும் – அரசும் வளர வேண்டும். அதுதான் உண்மையான வளர்ச்சி. இதில் எது ஒன்று தேய்ந்தாலும் அது வளர்ச்சி ஆகாது.

ஊரடங்கு அறிவித்தால் மட்டுமே கொரோனா பரவலைத் தடுக்க முடியும். அதே நேரத்தில் ஊரடங்கு காரணமாக ஏழை எளிய நடுத்தர மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டார்கள். அந்த மக்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கினோம். 14 வகையான மளிகைப் பொருட்ள்களை வழங்கினோம். மாநில விற்பனை வரியைக் குறைத்ததன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. பல்வேறு நிதிச்சுமைக்கு இடையில்தான் இதனை வழங்கினோம். இதற்கு ஒரே காரணம், மக்களைக் காக்கவேண்டும் என்ற அரசின் நோக்கம்தான். நேற்றும், இன்றும், நாளையும் திமுக அரசின் ஒரே நோக்கம் இது ஒன்றுதான். இந்த நோக்கத்துக்கு வங்கிகளும் உதவ வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்!

ஏழை எளிய மக்கள், விளிம்புநிலை மக்களின் உயர்வுக்கு வங்கிகள் உழைக்க வேண்டும். வங்கிச் சேவைகள் அவர்களுக்குப் பயன்பட வேண்டும். தமிழக அரசால் வகுக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு பயன்தர அரசுடன் வங்கிகள் இணைந்து செயல்பட வேண்டும். அரசு தன் திட்டங்கள் வழியாக மக்களுக்கு ஓரளவு நிதி உதவி செய்கிறது. கூடுதல் நிதியை வங்கிகள் மூலமாகவே மக்கள் பெறுகின்றனர். அந்தத் தேவையை வங்கிகள் பூர்த்தி செய்தாக வேண்டும்.கடன்களை சும்மா தருவது இல்லை. சும்மாவும் தர முடியாது. தகுதியானவர்களுக்கு கடன்களைக் கொடுப்பதன் மூலமாக வங்கியும் வளரும், மக்களும் வளர்வார்கள். இந்தப் பரஸ்பர நிதி நட்பானது நிலைத்து நீடிப்பது என்பது மாநிலத்தின் நிதி வளர்ச்சிக்கும் மக்களின் வளர்ச்சிக்கும் உதவியாக அமையும்.

பெண்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு சுயஉதவிக் குழுக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த ஆண்டு வங்கிக் கடன் இணைப்புக்கு 20,000 கோடி ரூபாய் இலக்கு உள்ளது.செப்டம்பர் 2021 வரை, 4,951 கோடி ரூபாய் கடன்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இலக்கை அடைய மீதமுள்ள தொகையையும் சேர்த்து வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இத்திட்டத்தின் மூலம் சுய உதவிக்குழுக்கள் கடன்பெறுவதற்குத் தங்களின் கள அளவிலான செயல்பாட்டாளர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வங்கிகள் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பிஎம் ஸ்வாநிதி என்பது கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தெருப்புற சின்னஞ்சிறு விற்பனையாளர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்க மலிவு கடன்களை வழங்குவதற்கான சிறப்பு மைக்ரோ கிரெடிட் வசதித் திட்டமாகும்.இத்திட்டத்தின் படி விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பத்தாரர்கள் கோரிக்கையையும் கனிவுடன் கவனிக்க வேண்டுகிறேன்.* தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு பல ஆண்டுகளாக சீரான அடிப்படையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. வங்கிகள் இந்த செயல்திறனைத் தொடரவும், தகுதியான அனைத்து விண்ணப்பங்களுக்கும் கடன் கிடைப்பதை உறுதிசெய்யவும் வேண்டும். அதனால் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்பதை உங்களுக்கு நான் நினைவூட்டுகிறேன்.* தமிழ்நாட்டில் சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் இம்மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையானவை ஆகும் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். 49.48 லட்சம் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 96.73 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன.

தமிழ்நாடு அரசு வங்கிக் கடன் அடிப்படையில் மூன்று சுயவேலைவாய்ப்பு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. சமீப ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள பல்வேறு வங்கிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட 1,37,429 விண்ணப்பங்களில், இதுவரை 35.67 விழுக்காடு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்க வேண்டும்.

இந்த ஆண்டில் சிறுகுறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஆதரிப்பதற்காக தமிழ்நாடு அரசு பல முக்கியமான முடிவுகளை அறிவித்துள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் இத்தகைய தொழில் நிறுவனங்களுக்கு கடன்களை அதிகரிக்க அரசு மாநில அளவிலான கடன் உத்தரவாத நிதியை அமைக்கும். இது சிறு நிறுவனங்களைக் காப்பாற்றுவதாக அமையும். அதனை வளர்த்தெடுப்பதாக அமையும். கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டது இந்த நிறுவனங்கள் ஆகும். எனவே அதனை மீட்டெடுப்பது அரசின் முக்கியமான இலக்காக அமைந்திருக்கிறது. எனவே அரசின் இரண்டு திட்டங்களையும் வங்கிகள் முழு மனதுடன் ஆதரிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.* அதே போல் மாணவர்களுக்கான கல்விக் கடனையும் தமிழக அரசு முக்கியமானதாகக் கருதுகிறது. மாணவர்களுக்குத் தரமான உயர்கல்வி கிடைப்பதை அரசு உறுதி செய்துள்ளது. அந்தக் கல்வியை அடையப் பணம் தடையாக இருக்கக் கூடாது. எனவே கல்விக் கடன்களை வழங்குவதன் மூலம் இந்த நோக்கத்தை மேம்படுத்துவதில் வங்கிகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. இங்குள்ள அனைத்து வங்கிகளும் சமுதாயத்தின் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு கல்விக்கடன் வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

விவசாயிகள் மாநிலத்தின் முதுகெலும்பாக உள்ளனர். அத்தகைய விவசாயிகளுக்குத் தேவையானதைச் செய்து கொடுக்கும் கடமை அரசுக்கும் இருக்கிறது, ஏன் உங்களைப் போன்ற வங்கிகளுக்கும் இருக்கிறது. உங்களைப் போன்ற வங்கிகளுக்கும் இருக்கிறது. கூட்டுறவு வங்கிகள் மற்றும் வணிக வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கடன் வழங்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதேபோல் அனைத்து வங்கிகளும் செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.* கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் கீழ், இதுவரை 31.09 லட்சம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 7.16 லட்சம் பயனாளிகளுக்கு விரைவாக கார்டுகள் வழங்கப்பட வேண்டும்.

உணவு பதப்படுத்தும் தொழில்களின் கீழ் 104 விண்ணப்பங்கள் வங்கிகளில் நிலுவையில் உள்ளன. இந்த விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்குமாறு வங்கியாளர்களை நான் கேட்டுக்கொள்கிறேன், இதனால் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு உரிய விலையை பெற முடியும்.* மீன்பிடித் தொழில் என்பது நம்முடைய பாரம்பரியத் தொழில்களில் ஒன்றாகும். இத்தொழிலை நம்பி லட்சக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். இன்று மீன்பிடித் தொழில் நவீனமாகி வருகிறது. ஆழ்கடல் மீன்பிடி படகுகளைப் பயன்படுத்தியாக வேண்டும். இதனை வாங்குவதற்கு வங்கியாளர்கள் முடிந்த அளவிற்கு உதவிகளைச் செய்திட வேண்டும்!* 2020-21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் அவர்கள் 13.8.2021 அன்று தாக்கல் செய்தார்கள். அப்போது நிதித்துறையில் ஒரு சிறப்பு பணிக்குழுவை அமைத்தார்கள். அரசின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ய சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது. அனைத்து வங்கிகளும் தங்களது கணக்கு விபரங்களை எங்களுக்கு அளித்துள்ளன.எதிர்காலத்தில் இந்தக் கவனத்தை இன்னும் நாங்கள் கூர்மைப்படுத்துவோம். அதற்கு அனைத்து வங்கிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

கோவிட் தொற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கும் வரவிருக்கும் நாட்களில் நமக்கு ஒரு பெரிய சவால் உள்ளது. ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசுடன் வங்கிகள் கைகோக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தச் சந்திப்பு மாநிலத்தின் வளர்ச்சியில் அரசாங்கத்திற்கும் வங்கிகளுக்கும் இடையிலான கூட்டுறவு உறவின் தொடக்கமாக இருக்கும் என்ற எனது நம்பிக்கையை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொண்டு, எனது உரையை நிறைவு செய்கிறேன் என்று” உரையாற்றினார்.

Tags: கல்விக்கடன்கொரோனாநிதியமைச்சர்பெண்கள்மகளிர் சுய உதவிக்குழுக்கள்வங்கிகள்வங்கியாளர் கூட்டம்ஸ்டாலின்ஸ்டாலின் கோரிக்கை
Previous Post

”வழக்கில் தனி நீதிபதியின் கருத்து புண்படுத்தியது!” – நடிகர் விஜய்

Next Post

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது… 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Editor Desk

Editor Desk

Next Post

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது... 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
நாயுடன் உடலுறவு கொள்ளும் வீடியோவை வலைதளத்தில் பதிவேற்றிய பெண்!

நாயுடன் உடலுறவு கொள்ளும் வீடியோவை வலைதளத்தில் பதிவேற்றிய பெண்!

April 7, 2023
’2 படம் ஹிட்டுனா மரியாதை போயிருமா?’ திட்டி தீர்க்கப்படும் பிரதீப் ரங்கநாதன்!

’2 படம் ஹிட்டுனா மரியாதை போயிருமா?’ திட்டி தீர்க்கப்படும் பிரதீப் ரங்கநாதன்!

April 4, 2023
கோவையைக் கலக்கிவரும் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா!

கோவையைக் கலக்கிவரும் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா!

April 1, 2023
’ஹீரோவைப் போல் இதன் இயக்குநரும் வேசி மகனா?’ – புர்கா படத்தால் கொதிக்கும் இஸ்லாமியர்கள்!

’ஹீரோவைப் போல் இதன் இயக்குநரும் வேசி மகனா?’ – புர்கா படத்தால் கொதிக்கும் இஸ்லாமியர்கள்!

April 18, 2023

Udhayanidhi Pudhukottaiக்கு ஏன் போகல? | Seeman Vote Bank 15% ஆக உயரும் | Journalist Mani Interview

0

மோடியின் அவலமான செயல் – Journalist Mani Latest Interview | 4th E Tamil 

0

Seeman Stalinஐ எதிர்த்து நிக்கணும் – Raveendran Duraisamy Latest Interview 

0

யுவன் எனும் தமிழ்த்திரை இசையின் இளவரசன்

0
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: ஒரு அலசல்

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: ஒரு அலசல்

May 31, 2025
அரிட்டாப்பட்டிக்கு வெண்ணெய் ! பரந்தூருக்கு சுண்ணாம்பா?

அரிட்டாப்பட்டிக்கு வெண்ணெய் ! பரந்தூருக்கு சுண்ணாம்பா?

December 13, 2024
அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் இவரா? அப்படினா ஜெகத்ரட்சகன் ஒரம்கட்டப்படுகிறாரா?

அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் இவரா? அப்படினா ஜெகத்ரட்சகன் ஒரம்கட்டப்படுகிறாரா?

February 15, 2024
வியர்வைத் துளிகள் எரிபொருளாகட்டும்-கட்சி தொண்டர்ளுக்கு தமிமுன் அன்சாரி கடிதம்…!

வியர்வைத் துளிகள் எரிபொருளாகட்டும்-கட்சி தொண்டர்ளுக்கு தமிமுன் அன்சாரி கடிதம்…!

October 17, 2023

Recent News

4thetamil is a media company with a vision to connect locally and reach globally with informative and entertaining news. We commit to create quality and creative content, Latest News, expert analysis, Trending articles, Video documentary, Event management from around the country which brings value to everyone

Follow Us

Browse by Category

  • Latest News
  • Uncategorized
  • அழகுக்குறிப்புகள்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உணவு
  • உலகம்
  • ஃபிட்னஸ்
  • சினிமா
  • சுற்றுச்சூழல்
  • செய்திகள்
  • சென்னை
  • டிரெண்டிங்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • தொழில்நுட்பம்
  • பயணம்
  • மருத்துவம்
  • லைப்ஸ்டைல்
  • விளையாட்டு
  • வீடியோ

Recent News

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: ஒரு அலசல்

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: ஒரு அலசல்

May 31, 2025
அரிட்டாப்பட்டிக்கு வெண்ணெய் ! பரந்தூருக்கு சுண்ணாம்பா?

அரிட்டாப்பட்டிக்கு வெண்ணெய் ! பரந்தூருக்கு சுண்ணாம்பா?

December 13, 2024
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2023 -Developed and Maintained by BridgeE.

No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சுற்றுச்சூழல்
    • விளையாட்டு
    • வணிகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • லைப்ஸ்டைல்
    • உணவு
    • ஃபிட்னஸ்
    • பயணம்

© 2023 -Developed and Maintained by BridgeE.