மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தனது 57-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாழ்த்து செய்தியில், “திரு. அமித்ஷா ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நான் பல ஆண்டுகளாக அமித்ஷாவுடன் பணியாற்றியுள்ளேன், கட்சியையும் அரசாங்கத்தையும் வலுப்படுத்த அவரது சிறந்த பங்களிப்புகளைக் கண்டுள்ளேன். அதே ஆர்வத்துடன் அவர் தொடர்ந்து தேசத்திற்கு சேவை செய்ய அவருக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
























