செவ்வாய் கிரகச் சூழலைப் போன்ற செயற்கை வாழ்விடத்தில் 378 நாட்கள் தங்கியிருந்த நான்கு நாசா ஆய்வாளர்கள் நேற்று பாதுகாப்பாக வெளியே வந்தனர். நாசா அதிகாரிகள் அவர்களுக்கு மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
2030-க்குள் மனிதர்களைச் செவ்வாய்க்கு அனுப்பும் திட்டத்தில் நாசா ஈடுபட்டுள்ளது. அங்குள்ள கடுமையான சூழலில் மனிதர்களின் உடல், மன நிலை எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே சோதிக்க, டெக்சாஸ் மையத்தில் 3டி அச்சு தொழில்நுட்பத்தில் 1,700 சதுர அடியில் இந்த வாழ்விடம் அமைக்கப்பட்டது.
ஜேம்ஸ் ஸ்பைசர், ராஸ் எல்டர், எல்லென் எல்லிஸ், மேத்யூ மாண்ட்கோமரி ஆகிய நால்வரும் கடந்த ஆண்டு அக்டோபர் 19-ல் வெளித் தொடர்பைத் துண்டித்து சுயவிருப்பத்தில் உள்ளே சென்றனர். செவ்வாய் மண் போன்ற அமைப்பில் பயிர் வளர்ப்பது, தகவல் தொடர்புத் தாமதத்தைச் சமாளிப்பது போன்ற சோதனைகளையும், குறைந்த நீர், உணவுடன் வாழும் பயிற்சியையும் அவர்கள் மேற்கொண்டனர்.
இந்தச் சோதனை வெற்றிகரமாக முடிந்ததை, விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய நிகழ்வாகப் பார்க்கின்றனர்.












