கஜகஸ்தானின் அல்மாட்டி நகரில் நடைபெற்று வரும் அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில், ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி முன்னேறியுள்ளது.
அரையிறுதியில் யூகி பாம்ப்ரியும் அவரது அமெரிக்க இணை ரியான் செகர்மேனும், அமெரிக்காவின் ஜேக்சன் வித்ரோ – நாதானியல் லேமான்ஸ் ஜோடியை எதிர்கொண்டனர். முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் அமெரிக்க ஜோடி கைப்பற்றியது.
அதன் பிறகு ஆட்டத்தின் போக்கை மாற்றிய பாம்ப்ரி – செகர்மேன் இணை, இரண்டாவது செட்டை டைபிரேக்கரில் 7-6 (7-5) என வென்றது. வெற்றியை நிர்ணயித்த மூன்றாவது செட்டில் 10-6 என்ற கணக்கில் வென்று, ஆட்டத்தை தங்களுக்குச் சாதகமாக முடித்து இறுதிக்குள் நுழைந்தது.



















