நடிகர் பிரபாஸ் தனது 47-வது பிறந்தநாளை இன்று கொண்டாடும் நிலையில், அவர் நடித்து வரும் 'பவுசி' படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 'Declassifying File No. 25' என்ற வாசகத்துடன் புதிய அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. படத்தைத் தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்தப் போஸ்டரை வெளியிட்டது.
'சீதா ராமம்' படம் மூலம் கவனம் பெற்ற ஹனு ராகவபுடி இயக்கும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. இமான்வி, அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, ஜெயப்பிரதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி-சீரிஸ் இணைந்து தயாரிக்கின்றன. ஒளிப்பதிவு சுதீப் சட்டர்ஜி, இசை விஷால் சந்திரசேகர்.
படம் டிசம்பர் 3-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான போர் பின்னணி கொண்ட போஸ்டரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. பிரபாஸுக்கு ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



















