பொன்னியில் செல்வன் 2 படத்தின் ‘அக நக’ பாடலின் Lyrical Video இணையத்தில் வெளியானது.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயசித்ரா உள்ளிட்டோர் நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கியின் வரலாற்றுப் புதினத்தை கதையமைப்பாகக் கொண்டு உருவான இத்திரைப்படம், உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகி வசூலை அள்ளியது.
லைகா மற்றும் மணிரத்னம் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசைமைத்தார். ஒளிப்பதிவு ரவிவர்மன் மற்றும் படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத். இரு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதன் முதல் பாகத்தின் இடம்பெற்ற பொன்னி நதி, அலைகடல், தேவராளன் ஆட்டம் உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்தின் பாடல்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டுவிழா இம்மாத இறுதியில் நடைபெறும் என்று கூறப்படும் நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ’அக நக’ பாடலின் Lyrical Video இணையத்தில் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் பட முதல் பாகத்தில் சக்திஸ்ரீகோபாலன் குரலில் பின்னணி இசையாக வந்துபோகும் ’அக நக’ பாடலின் முழு வடிவத்தை இசைப்பிரியர்கள் கொண்டாடி வருகின்றனர். அப்பாடலின் காணொலி உங்கள் பார்வைக்கு.


























