காவல் நிலைய பெயர் பலகைகளில் உள்ள விளம்பரங்களை நீக்கி புதிதாக பெயர் பலகை அமைக்கும்படி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அச்சுற்றறிக்கையில் ‘தமிழகத்தில் உள்ள காவல்நிலைய பெயர் பலகைகளில் தனியார் நிறுவன பெயர்கள் இடம்பெற்றிருந்தால் உடனே நீக்கவேண்டும். சில காவல்நிலைய பெயர் பலகையில் தனியார் நிறுவன பெயர்கள் இடம்பெற்றிருப்பது தவறான புரிதலை ஏற்படுத்துகிறது. ஆகவே அதனை நீக்கி விட்டு காவல் நிலையத்தின் பெயர் மட்டும் பதிக்கப்பட்ட பலகைகளை அமைக்க வேண்டும். காவல்நிலையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தைக் கொண்டு புதிதாக பெயர் பலகைகளை வைத்துக் கொள்ளலாம். ‘ என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
























