தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர் (ஓய்வு) காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், சுகவனேஸ்வர் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த துயரம் அடைந்ததாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
சுகவனேஸ்வர் 1967-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி அலுவலராகத் தேர்வானார். திருநெல்வேலியில் உதவி ஆட்சியராகப் பணியைத் தொடங்கிய அவர், நீலகிரி மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், வருவாய் நிர்வாக முதன்மை ஆணையர், சிட்கோ தலைவர் என பல பொறுப்புகளை வகித்தார். இறுதியாக தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராகவும் பணியாற்றினார்.
அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்களுக்கு முதல்வர் தமது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.













