ஜப்பானில் நடைபெறும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர் ஹானி, ஆண்கள் ஈட்டி எறிதலில் உலக சாதனையுடன் தங்கம் வென்றுள்ளார்.
எஃப்37/எஃப்38 பிரிவில் போட்டியிட்ட அவர், தனது ஐந்தாவது முயற்சியில் 59.72 மீட்டர் எறிந்து உலக சாதனை படைத்தார். கடைசி முயற்சியில் 60.49 மீட்டர் எறிந்து, தனது சொந்த சாதனையையே மீண்டும் முறியடித்தார். ஈரானின் ஹார்மோஸ் செய்டிகாஸ்பவுஞ்சி வெள்ளியும், சீனாவின் யூ செங்ஜி வெண்கலமும் வென்றனர்.
இரண்டு நாட்களுக்கு முன் நடந்த ஆண்கள் வட்டு எறிதல் எஃப்37 பிரிவில் ஹானி 57.04 மீட்டர் எறிந்து வெண்கலம் பெற்றிருந்தார். இந்தத் தொடரில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.













