ஜப்பானில் நடைபெற்று வரும் 5-ஆவது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பாட்மிண்டன் கலப்பு இரட்டையர் SH6 பிரிவில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அந்த அணியில் இடம்பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை நித்ய ஶ்ரீக்கு, தமிழக அரசின் சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், பதக்கம் வென்ற இந்திய அணிக்கும் நித்ய ஶ்ரீக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவற்றால் நித்ய ஶ்ரீ சாதித்துள்ளார் என்றும், தடைகளைத் தாண்டி வெல்ல விரும்பும் இளைய தலைமுறைக்கு இந்த வெற்றி புதிய ஊக்கம் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்திலும் பல வெற்றிகளைப் பெற்று மேலும் உயரங்களை எட்ட வேண்டும் என்றும் முதலமைச்சர் வாழ்த்தியுள்ளார்.




















