இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டதற்காக, அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா முதலமைச்சர் விஜய்க்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
76 வயதான தேவா, மாரடைப்பால் கடந்த 17-ஆம் தேதி காலமானார். முதலமைச்சர் விஜய், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், ரஜினி, கமல் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். அவரது சொந்த கிராமமான சக்கரமநல்லூரில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
வீடியோவில் பேசிய ஸ்ரீகாந்த் தேவா, தந்தையின் மறைவு குடும்பத்துக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்ததாகவும், அதை இன்னும் நம்ப முடியவில்லை என்றும் கூறினார். 40 ஆண்டுகள் இசைத் துறையில் இருந்த தந்தைக்கு இது மிகப்பெரிய அங்கீகாரம் என்று குறிப்பிட்ட அவர், அமைச்சர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
முதலமைச்சர் விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதையும் அவர் நினைவுகூர்ந்தார். முதலமைச்சர் கண்கலங்கியபடி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதாகவும், தேவையான உதவி எதுவானாலும் கேட்கலாம் என்று கூறிச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.




















