வேலூர் மாவட்டம் அணைக்கட்டு கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று (அக்டோபர் 21) வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசு தயாரிப்பின்போது நிகழ்ந்த இந்த விபத்தில், அங்கு வேலை பார்த்த கொட்டாவூரைச் சேர்ந்த காயத்ரி (40) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தில் படுகாயமடைந்த சங்கீதா (35), முதலில் அணைக்கட்டு அரசு மருத்துவமனையிலும், பின்னர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்குச் சிறப்புச் சிகிச்சை அளிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் முதலமைச்சர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, உயிரிழந்த காயத்ரியின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சமும், சிகிச்சையில் உள்ள சங்கீதாவுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.




















