மாமன்னர் ராஜராஜ சோழனின் 1041-ஆவது சதய விழா இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரைப் போற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நீர் மேலாண்மை, நில மேலாண்மை, ஆட்சி நிர்வாகம், கட்டடக்கலை, படைவலிமை, போர்த்திறன் உள்ளிட்டவற்றில் உயரங்களை எட்டி தமிழர் பெருமையை உலகறியச் செய்தவர் ராஜராஜ சோழன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜராஜ சோழனின் பிறந்தநாளை ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாட 2022-ஆம் ஆண்டு திமுக அரசு அறிவித்தது என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
சோழர் காலச் சிறப்புகளை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசேர்க்கும் நோக்கில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் ரூ.56 கோடி செலவில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கத் திமுக ஆட்சியில் அடித்தளமிடப்பட்டதாகவும் அவர் கூறினார். 'பழக்க தோஷத்தில்' அந்தத் திட்டத்தையும் தவெக அரசு குறுகிய பார்வையுடன் ரத்து செய்து, தமிழர் வரலாற்றை இருட்டடிப்பு செய்யாது என நம்புவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் சதய விழா சிறப்பாக நடைபெற வேண்டும் என்றும் அவர் வாழ்த்தினார்.




















