பீடி இலைகளை இலங்கைக்குக் கடத்தியதாகத் தூத்துக்குடியைச் சேர்ந்த 2 பைபர் படகுகளை இலங்கைக் கடற்படையினர் பிடித்துள்ளனர். படகுகளில் இருந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த இந்தப் படகுகள், பீடி இலை மூட்டைகளுடன் இலங்கையின் புத்தளம் கடற்பரப்பில் சிக்கின. ஒரு படகிலிருந்த 4 பேரில் தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். மற்றொரு படகில் இருந்த 3 பேர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
கைதானவர்களிடம் இலங்கைக் கடற்படையினரும் துறை அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












