இன்று (02.11.2026), திங்கட்கிழமை, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திரு. லயோலா மணி அவர்கள், முரசு புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னையில் பெய்து வரும் கனமழையைக் கருத்தில் கொண்டு, கழகத்தின் தலைமை அலுவலகக் கட்டிட வளாகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், கட்டிட வளாகத்தைச் சுற்றியுள்ள மரங்கள் ஏதேனும் ஆபத்தான நிலையில் இருந்தால், அது குறித்து உடனடியாக மாநகராட்சி நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைச் சந்தித்துப் புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்ததுடன், அனைவரும் உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி, பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தினார்.


















