தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் வழங்கப்படும் மாதாந்திர எதிர்பாராச் செலவு நிதியை உயர்த்தி முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதற்காக ஆண்டுக்கு ரூ.71 கோடியே 1 லட்சத்து 54 ஆயிரம் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
காவல் நிலையங்கள் அவற்றின் குற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கைக்கேற்ப மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி மாதம் ரூ.3,750 பெற்ற நிலையங்களுக்கு ரூ.30,000 ஆகவும், ரூ.6,000 பெற்றவற்றுக்கு ரூ.40,000 ஆகவும், ரூ.8,250 பெற்றவற்றுக்கு ரூ.50,000 ஆகவும் நிதி உயர்த்தப்படுகிறது.
இதுகுறித்த செய்திக் குறிப்பில், காவல்துறையின் நிர்வாகம் மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிதி உயர்வால் அன்றாடச் செலவுகளைச் சமாளிப்பதில் உள்ள சிரமம் குறையும் என்றும், அதிகாரப்பூர்வமற்ற வழிகளைச் சார்ந்திருப்பது குறைந்து ஊழலைத் தடுக்கவும் உதவும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
2026-27 நிதியாண்டுக்கான காவல்துறை மானியக் கோரிக்கையின்போது இந்த உயர்வு குறித்து முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். அதை நடைமுறைப்படுத்தும் வகையில் இப்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


















