தொடர் கனமழைக்கு இடையே, சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம் ஏரியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று பிற்பகல் ஆய்வு செய்கிறார். ஏரியின் தற்போதைய நீர்மட்டம் என்ன, வரும் நாட்களில் மழையால் அது உயருமா என்பது குறித்து அவர் கேட்டறிவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கக்கடலில் உருவாகியுள்ள அர்னாப் புயல் இன்று (26-10-26) புயலாக வலுப்பெற்று, நாளை தீவிரப் புயலாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 28-ம் தேதி ஆந்திராவின் பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே அது கரையைக் கடக்கக்கூடும்.
புயல் மற்றும் கனமழை எச்சரிக்கையால் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும்வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


























