கனமழை காரணமாக கோயம்புத்தூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி, உதகை, குந்தா ஆகிய வட்டங்களிலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பெரியகுளம் வட்டத்துக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரு வட்டங்களில் உள்ள 5 பள்ளிகளுக்கும் மட்டும் விடுமுறை உண்டு. புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுடன் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 15-ம் தேதி தொடங்கிய நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள், கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் நேற்றிரவு பெய்த கனமழையால் தண்ணீர் தேங்கி மக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். இதற்கிடையே, வங்கக்கடலில் உருவாகியுள்ள அர்னாப் புயல் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.


























