நடிகர் சந்தானம் நடிக்கும் 20-ஆவது திரைப்படத்துக்கு 'அதிசய பிறவி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தின் பூஜை இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றது. வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட், கே7 ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. அறிமுக இயக்குநர் சுதாமன் கிருஷ்ணா இயக்குகிறார்; ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சந்தானத்துக்கு ஜோடியாக கோபிகா ரமேஷ் நடித்துள்ளார். படப்பிடிப்பு அக்டோபர் 19-ஆம் தேதி நிறைவடைந்தது.
நடிகர்கள் சிம்பு, ஆர்யா, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், அஷ்வத் மாரிமுத்து உள்ளிட்டோர் தங்கள் எக்ஸ் பக்கங்களில் போஸ்டரைப் பகிர்ந்து படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். போஸ்டரில் ஆம்புலன்ஸ் மேற்கூரையில் ஆக்சிஜன் சிலிண்டருடன் சந்தானம் நிற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
இதே தலைப்பில் எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் 1990-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. சந்தானம் நடிப்பில் கடந்த ஆண்டு 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' வெளியானது; இந்த ஆண்டு அவரது எந்தப் படமும் இதுவரை திரைக்கு வரவில்லை.


















