தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் உண்டியல் வசூல் 38 லட்சம் ரூபாயைத் தாண்டியிருக்கிறது.
கோயில் நகரமான மதுரையின் அடையாளமாக இருப்பது மீனாட்சி அம்மன் கோயில். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவிலிருந்தும் அதிக அளவிலான பக்தர்கள் வருகை புரிகின்றனர். அக்கோயில் வளாகத்திலும் அதனைச் சார்ந்திருக்கும் உப கோயில்களிலும் உள்ள உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.
அதில் பணமாக 38லட்சத்து 62ஆயிரத்து 507 ரூபாயும், 408 கிராம் தங்கம் மற்றும் 503 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக இடப்பட்டுள்ளன. மேலும் அந்நிய நாட்டுப் பணங்களும் காணிக்கை செலுத்தப்பட்டிருப்பதாக மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
























