சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், கூவம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள இரண்டு முக்கியப் பாலங்களை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. இன்னர் ரிங் ரோட்டில் கிமீ 8/8-ல் உள்ள பாலம் மற்றும் பேசின் பாலம் ஆகியவை இதில் அடங்கும்.
இதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க, இரு பாலங்களுக்கும் தனித்தனியாக டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன.
பேசின் பாலத்தை அகலப்படுத்தினால், அந்தப் பகுதியில் பயண நேரம் 20 நிமிடங்களிலிருந்து 4 நிமிடங்களாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் அலுவலகத்துக்கு அளிக்கப்பட்ட மனுவின் அடிப்படையிலேயே பேசின் பாலத்தை அகலப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி வருகிறது.





















