ஸ்பெயின் நாட்டின் ஷிட்ஜ்ஸ் நகரில், உலக மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. மேரி ஆன் கோம்ஸ், ஆர். வைஷாலி, ஹாரிகா, தானியா சச்தேவ் அடங்கிய இந்திய அணி அரையிறுதியில் ஜார்ஜியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இந்திய அணி, ரஷிய அணியை இறுதிப்போட்டியில் எதிர்கொண்டது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆரம்பம் முதலே ரஷிய அணி ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் இந்திய அணியை 0-2 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி உலக மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை ரஷியா வென்றது.
உலக மகளிர் செஸ் போட்டியில் ரஷியா தங்கப்பதக்கம் வென்றது. இறுதிப்போட்டியில் ரஷியாவிடம் தோல்வியடைந்த போதும் பட்டியலில் 2-வது இடம்பிடித்த இந்திய மகளிர் அணி வெள்ளிப்பதக்கத்தை வென்றது.
இந்தியா வென்ற உலக மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
























