தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றிருக்கு ஆர்.என்.வி ரவி இன்று பதவியேற்றார். கிண்டியில் உள்ள ராஜ்பவனில் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது.
தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டு நாகலாந்து மாநில ஆளுநராக இருந்த ஆர்.என்.வி ரவி தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னை வந்த அவரை முதல்வர் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகள் அனைவரும் வரவேற்றனர்.
இன்று காலை 10.30 மணிக்கு தமிழ்நாட்டின் புதிய ஆர்.என்.வி.ரவி பதவியேற்றுக் கொண்டார். ஆளுநராக பதவியே பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் வணக்கம் என தமிழில் கூறி செய்தியாளர் சந்திப்பை தொடங்கினார். மேலும், “பழம்பெருமை மிக்க தமிழ்நாட்டில் ஆளுநராக பொறுப்பேற்றதற்கு பெருமைப்படுகிறேன். தொன்மையான தமிழ்மொழியை கற்க விரும்புகிறேன்.
அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக உழைப்பேன். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு தமிழ்நாட்டில் சிறப்பாக செயலாற்றி வருகிறது.” என்று கூறினார்.
























