டான் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீயின் உதவி இயக்குநர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், பிரியங்கா அருள்மோகன் ஜோடியாக, எஸ்.ஜே,சூர்யா, சிவாங்கி ஆகியோர் நடிப்பில் ‘டான்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இயக்குநர் அட்லீயின் உதவி இயக்குநர் அசோக் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். இத்திரைப்படத்துக்கு ‘சிங்கப்பாதை’ என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘டாக்டர்’ திரைப்படம் அக்டோபர் மாதத்தில் வெளியாகவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள அயலான் திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
























