காரைக்கால் பாமக மாவட்ட செயலாளராக தேவமணி என்பவர் இருந்து வருகிறார். இவர் காரைக்கால் அடுத்த திருநள்ளாரில் வசித்து வருகிறார். நேற்று இரவு திருநள்ளாறு கடைவீதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு செல்லும்போது மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரை காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இக்கொடூரச் சம்பவம் குறித்து திருநள்ளாறு மற்றும் காரைக்கால் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகிறார்கள். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த அவரது ஆதரவாளர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
























