கன்னட சினிமாவின் பிரபல நடிகரான புனித் ராஜ்குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டாரான ராஜ்குமாரின் மகன்களில் ஒருவர் புனித் ராஜ்குமார். நடிகர், பாடகர் என இவருக்கு பன்முக அடையாளங்கள் உண்டு. 46 வயதாகும் புனித் ராஜ்குமார் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்து வருகிறார். கன்னட திரை உலகில் தனக்கென பெரும் ரசிகப்பட்டாளத்தையே கொண்டிருக்கிறார். இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் விக்ரம் மருத்துவமனைக்குச் சென்று புனித் ராஜ்குமாரின் உடல்நிலை குறித்தும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் புனித் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என திரையுலகினர் தொடங்கி ரசிகர்கள் வரை பலரும் வேண்டுதலை பதிவு செய்து வருகின்றனர்.
























