இங்கிலாந்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் இருவர் தன்பாலின ஈர்ப்பாளர்களாக மாறி காதலிக்கும் வினோத நிகழ்வு அரங்கேறியுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகளான லிண்ட்சே மற்றும் லூசி ஸ்காட் ஆகியோர் ஒரு தாய்க்கு பிறந்த இரட்டைச் சகோதரிகள். இவர்களுக்கு 23 வயதாகிறது. பொதுவாக இரட்டைச் சகோதரிகளுக்குள் இருக்கும் நெருக்கம், பாசம், அன்பு இவர்கள் இருவருக்குள்ளும் சற்று அதீதமாக இருந்துள்ளது.
இதனால் ஒருவரை ஒருவர் பிரிந்துவிடக்கூடாது என்பதால் ஒன்றாகவே இருந்துள்ளனர். காலப்போக்கில் தான் இருவரும் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்பது இவர்களுக்குப் புரிந்துள்ளது. அதாவது, வளர வளர இவர்களுக்கு ஆண்களின் மேல் மோகம் வராமல் பெண்கள் மேல் ஈர்ப்பு வந்துள்ளது.
லூசிக்கும், லிண்ட்சேவுக்கும் தனித்தனி காதலிகள் உள்ளனராம். இதனால் தங்களுக்குள்ளேயும் பிரிவு ஏற்படாமல் தங்கள் காதலிகளை விட்டும் விரிந்துவிடாமல் இருக்க சகோதரிகள் இருவர் மற்றும் அவர்களின் காதலிகள் ஆகிய நால்வர் ஒரே வீட்டில் தங்கியுள்ளனராம்.
பொதுவாக தன்பாலின ஈர்ப்பு என்பது எந்த மனிதருக்கும் இயற்கையாக வரக்கூடிய உணர்வு. இரட்டைச் சகோதரிகளாகவே பிறந்திருந்தாலும் அதில் ஒருவர் தன்பாலின ஈர்ப்பாளராக இருப்பது இயல்பாக நிகழக்கூடிய விஷயம் என்றாலும், சகோதரிகள் இருவருமே இப்படி தன்பாலின ஈர்ப்பில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பது வியப்பான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.


























