இன்று (சனிக்கிழமை) காலை 6.30 மணியளவில், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்பூர் ரெயில் நிலையத்தில் ஜார்சுகுடாவில் இருந்து ஜம்மு தாவிக்கு செல்லும் ரெயில் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக வெல்டிங் பற்றவைப்பு பெட்டி தரையில் விழுந்து வெடித்தது. இச்சம்பவத்தில் நான்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் காயம் அடைந்தனர். உடனடியாக காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களில் ஒரு தலைமை காவலர் உட்பட அனைவரும் ராய்பூரில் உள்ள நாராயணா மருத்துவமனையில் அனுமதிக்கப்படு உள்ளனர்.
























