சினிமா

இயக்குனர் ஷங்கர் படத்தில் வில்லனாக சுரேஷ் கோபி…?

இந்தியன் 2 படத்தை பாதியில் விட்டு, இயக்குனர் ஷங்கர் ராம் சரண் நடிக்கும் தெலுங்குப் படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கு, தமிழ் இரு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் புனேயில் தொடங்கியது. கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார். ரகுமான், சுனில் உள்பட பலர் இதில் நடிக்கின்றனர்.  இந்தப் படத்தில் யார் வில்லனாக நடிக்கிறார்கள் என்ற தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. மலையாள நடிகர் சுரேஷ் கோபி படத்தில் வரும் பல வில்லன்களில் ஒரு வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. அவரது மனைவியாக ஈஷா குப்தா நடிக்கயிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்தத் தகவல்களை படம் சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் உறுதி செய்யவில்லை.  தில் ராஜு சுமார் 170 கோடிகள் பட்ஜெட்டில், ஆர்சி 15 என தற்காலியமாக  அழைக்கப்படும் இந்தப் படத்தை தயாரிக்கிறார். தற்போது ராம் சரண், கியாரா அத்வானி இடம்பெறும் பாடல் காட்சியை ஷங்கர் படமாக்கி வருகிறார். சுமார் இரண்டு வாரங்கள் இந்தப் பாடல் காட்சியை படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமன் இசையில் இந்தப் பாடல் உருவாகியுள்ளது. ஷங்கர் படத்துக்கு தமன் இசையமைப்பது இதுவேமுதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Read moreDetails

குடியரசுத் தலைவர், பிரதமரைச் சந்தித்த ரஜினிகாந்த்

இந்திய அரசின் சார்பில் திரைத்துறைக்கென வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை பெற்றதையொட்டி குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரைச் சந்தித்து ரஜினிகாந்த் வாழ்த்து பெற்றார்....

Read moreDetails

ஷாருக் – அட்லீ இந்திப்படம் ~ நயன்தாராவுக்கு பதில் சமந்தா நடிக்கிறாரா?

இயக்குநர் அட்லீ நடிகர் ஷாருக்கானை நாயகனாக வைத்து இயக்கி வரும் இந்திப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது நயன்தாராவுக்கு பதிலாக சமந்தா நடிக்கவிருப்பதாக...

Read moreDetails

’ஒத்த செருப்பு’ படத்திற்கு ஏன் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்படவில்லை? – பார்த்திபன்

நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்த ’ஒத்த செருப்பு’ என்ற திரைப்படத்திற்கு சிறந்த சவுண்ட் எபக்ட் மற்றும் சிறந்த ஜூரிக்கான தேசிய விருதுகள் கிடைத்தன. பல...

Read moreDetails

ஓடிடி மற்றும் தொலைக்காட்சியில் ’டாக்டர்’ திரைப்படம்!

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய திரையரங்குகள் திறப்பில், சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் கோலிவுட் சினிமாவுக்கு திருப்திகரமான வசூலை அள்ளித் தந்திருக்கிறது. வெளிநாடுகள் உட்பட வெளியான இடங்களில் எல்லாம்...

Read moreDetails

”வழக்கில் தனி நீதிபதியின் கருத்து புண்படுத்தியது!” – நடிகர் விஜய்

கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை நடிகர் விஜய் இறக்குமதி செய்தார். இறக்குமதி செய்யப்பட்ட காரை பதிவு செய்ய...

Read moreDetails

தாதா சாகிப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!

இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவரும் இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான தாதா சாகேப் பால்கே நினைவாக தாதா சாகிப் பால்கே விருது நிறுவப்பட்டது. திரைப்பட விருதுகளில்...

Read moreDetails

தாதா சாகேப் பால்கே விருது ~ மக்கள் கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த்

இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் தாதா சாகேப் பால்கே விருது இந்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்திய...

Read moreDetails

டெல்லியில் தேசிய விருது பெற்ற தனுஷ், விஜய் சேதுபதி, டி. இமான், வெற்றி மாறன்!

67ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் தொடங்கியது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை மந்திரி அனுராக் தாக்கூர்,...

Read moreDetails

“நாளை எனக்கு இரண்டு முக்கிய நிகழ்வுகள்!” – ரஜினிகாந்த் டுவீட்

நடிகர் ரஜினிகாந்துக்குநாளை டெல்லியில் நடைபெறும் விழாவில் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை போயஸ்கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது,...

Read moreDetails
Page 10 of 22 1 … 9 10 11 … 22

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest

Recent News