மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் நவம்பர் 1 முதல் செயல்படலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போதைக்கு நர்சரி பள்ளிகள் திறப்பு இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த 14-ம் தேதி தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்தது. மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள்(LKG, UKG), அங்கன்வாடி பள்ளிகள் நவம்பர் 1 முதல் முழுமையாக செயல்படும். காப்பாளர், சமையலர் உள்பட அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று அறிவித்தது.

தமிழக அரசு, நர்சரி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்ததையடுத்து, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் மழலையர் மற்றும் எல்.கே.ஜி., யூ.கே.ஜி, உள்ளிட்ட நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது என்றும் இது குறித்த தெளிவான அறிக்கை விரைவில் வெளியடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு இல்லை என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
























