சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாவதால் ரஜினி ரசிகர்கள் பெரும் ஆவலோடு அதனை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கிறார்.
இமான் இசையில் இதுவரை ‘அண்ணாத்த அண்ணாத்த’ ‘சாரக் காற்றே’ ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி ஹிட்டடித்துள்ளது. அப்பாடல்கள் படத்துக்கான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியிருக்கும் நிலையில் எப்போது டீசர், ட்ரெய்லர் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இத்திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் டீசர் அக்டோபர் 14ம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதன்படி இன்று மாலை 6 மணிக்கு அண்ணாத்த டீசர் வெளியிடப்படவிருப்பதால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள். இந்த தீபாவளி எங்க தலைவர் தீபாவளி என்று அவர்கள் உற்சாகம் தெறிக்க சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
























