இந்தோனேஷியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது இணையுடன் வித்தியாசமான முறையில் பாலுறவு வைத்துக்கொள்ள ஆசைப்பட்டு தனது ஆணுறுப்பை முறித்துக் கொண்டுள்ள சம்பவம் பகீரவைத்துள்ளது.
இந்தோனேஷியாவைச் சேர்ந்த 37 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் தனது இணையுடனான பாலுறவின் போது, “Reverse cowgirl” என்ற Sex Position-ல் ஈடுபட்ட சமயம் அவரது ஆணுறுப்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த Positionல் அவரது இணை அவருக்கு மேலே இருந்தவாறு, அவரது முகத்திற்கு எதிர்திசையில் தனது முகத்தை வைத்துள்ளார்.
“Reverse cowgirl” என்பது பாலுறவில் உலகிலேயே மிகவும் ஆபத்தான Sex Position என்று மருத்துவர்களால் கூறப்படுகிறது. ஆண்களுக்கு ஏற்படும் 50% பிறப்புறுப்பு முறிவுகளுக்கு இந்த பொசிஷனே காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பாலுறவில் ஈடுபட்டிருந்த சமயம் அந்த ஆண் ஏதோ ஒன்று முறியும் சத்தத்தைக் கேட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு ஆணுறுப்பில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது ஆணுறுப்பின் விறைப்புத்தன்மை திடீரெனக் குறைந்துள்ளது. தொடர்ந்து அவரது ஆணுறுப்பின் முனையிலிருந்து அச்சமயம் இரத்தம் பீறிட்டு வெளியேறியுள்ளது. மேலும் அச்சமயம் அவரால் ஒரு சொட்டு கூட சிறுநீர் கழிக்கமுடியாத் நிலை ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தான், உடனடியாக அவர் அருகிலிருந்த மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். அச்சமயம் அவரது உறுப்பு ஊதா நிறத்தில் சிவந்துபோய் காணப்பட்டுள்ளது. அடிப்படையில் ஆணுறுப்பில் எலும்புகள் இல்லாத நிலையில், ஆணுறுப்பு முறிவு என்ற சொல் உறுப்பை பெரிதாக்கும் மற்றும் விரைப்படையவைக்கும் ஆணுறுப்பின் திசு கிழிவதைக் குறிப்பதாக மருத்துவ உலகம் விவரிக்கிறது.
பாதிக்கப்பட்ட நபருக்கு ஆணுறுப்பில் ஆழமான முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது திசுக்கள் சிதைந்துள்ளதாகவும் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மேலும் அவருக்கு இரத்த நாளங்களின் சுவர்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனாலேயே அவரது ஆணுறுப்பிலிருந்து இரத்தக்கசிவு ஏறட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதுபோன்ற பாதிப்புகள் ஆண்கள் படுக்கையில் அபாயகரமான கோணத்தில் சுயஇன்பத்தில் ஈடுபட்டாலும் ஏற்படலாம் என்று தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நல்வாய்ப்பாக பாதிக்கப்பட்ட நபருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு அவரது முறிவு சரிசெய்யப்பட்டு, ஆணுறுப்பில் கிழிந்த பகுதி தைக்கப்பட்டது. பொதுவாக “Reverse cowgirl” மிகவும் ஆபத்து நிறைந்த Sex Position என்றும் இதனால் உறவில் ஈடுபட்டுள்ள ஆணுறுப்பு லேசாக நகர்ந்தாலும் பெண்ணுறுப்பின் உள்ளே இருக்கும் எலும்பில் பட்டு முறிந்துவிடும் அபாயம் இருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.


























